கனடா செய்திகள்

ரொரன்ரோவில் உள்ள பாடசாலை ஒன்று கைத்தொலைபேசியை தடை செய்துள்ளது!

17 Feb 2017

பாடசாலையினுள் கைபேசி பயன்படுத்துவதை ரொரன்ரோவில் உள்ள பாடசாலை ஒன்று தடை செய்துள்ளது.

ரொரன்ரோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள  Earl Grey Senior Public School பாடசாலையே பாடசாலையினுள் கைபேசி பயன்படுத்துவதை தடை செய்வதாக அறிவித்துள்ளது.

கைபேசி பயன்பாடுகளால் கவனச் சிதறல்கள் உச்ச அளவில் அதிகரித்துச் செல்வதாக பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் மேறகொள்ளப்பட்ட முறைப்பாடடினை தொடர்ந்து  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனால், வகுப்பறைகளுக்குள்ளும், வகுப்பறைகளுக்கு வெளியே உள்ள நடைபாதைகளிலும்  கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பிலான கடிதங்கள் பாடசாலை அதிபரால் பெற்றோருக்கு இந்த வாரத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த கடிதத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலை அடுத்தே பாடசாலையினுள் கைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்