இலங்கை செய்திகள்

யாழ்.பல்கலைகழக மாணவர்களின் நடைபவனி இரண்டாம் நாளாக தொடர்கின்றது

10 Oct 2018

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்களின் இரண்டாம் நாள் நடைபவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று பளையை சென்றடைந்த மாணவர்கள், இன்று புதன்கிழமை அங்கிருந்து பரந்தன் ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் நேற்று அனுராதபுரம் சிறைச்சாலையை நோக்கிய நடைபவனியை ஆரம்பிததனர். யாழ். பல்கலைகழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான நடைபயணம் நேற்று பளையை சென்றடைந்தது.

அரசாங்கம் ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்து கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என கோரியே இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்