கனடா செய்திகள்

மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டும் ரொறன்ரோவில் குற்றச் செயல்கள் குறையவில்லை

13 Sep 2018

ரொறன்ரோவில் இந்த வருடம் முழுவதும் பல குற்றச்செயல்கள் அதிகரித்திருந்த நிலையில் சுமார் 200 இற்கு மேற்பட்ட மேலதிக பொலிஸார் யூலை மதம் முதல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டும் அப்பகுதியில் குற்றச்செயல்கள் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இரவு வேளைகளில் கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இதனால் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களின் எண்ணிக்கையில் கொஞ்சம் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியிருந்தார்.

இருப்பினும் கூடுதல் அதிகாரிகல் கடமையில் இருந்த போதும், டான்ஃபோர்ட் அவென்யூ, யார்க்டேல் மால், பகல்நேர பிளே சந்தை மற்றும் நகரில் உள்ள பல இடங்களில் தொடர்ந்தும் துப்பாக்கி சூடு இடம்பெற்றது.

குறிப்பாக, ரொறொன்ரோவின் பொலிஸ் இணையத்தளத்தில் கிடைத்த புள்ளி விபரங்களின்படி யூலை 20 முதல் செப்டெம்பர் 9 வரையான காலப்பகுதியில் ரொறன்ரோவில் சுமார் 65 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை  இடம்பெற்ற ஊடகவிலாளர்கள் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்