சினிமா செய்திகள்

மீண்டும் நிர்வாணமாக நடிக்க வேண்டும்.. ரன்வீர் சிங்கிற்கு அழைப்பு விடுத்த பிரபல நிறுவனம்..

05 Aug 2022

அவரது நிர்வாணப் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கும்படி தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சமீபத்தில் டெல்லியில் உள்ள இந்தூரில் ரன்வீர் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவருக்கு ஆடைகள் நன்கொடையாக அனுப்பும் போராட்டத்தை தொண்டு நிறுவனம் நடத்தியது. மேலும், இவரது நிர்வாணப் புகைப்படத்திற்கு பலர் ஆதரவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், ரன்வீர் சிங்கிடம் பிரபல நிறுவனம் மீண்டும் நிர்வாணமாக நடிக்க அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, பீட்டா அமைப்பு தங்கள் பிரச்சாரத்துக்காக மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்கும்படி ரன்வீர் சிங்கிற்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பிவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam