கனடா செய்திகள்

மிசிசாகுவா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு

05 Dec 2018

ஒன்ராறியோவின் மிசிசாகுவா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று குறித்த விபத்து சம்பவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண், வீதியை கடக்க முற்பட்ட வேளையில் வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தை அடுத்து குறித்த பகுதியூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்