இலங்கை செய்திகள்

மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

11 Jul 2019

முல்லைத்தீவு, மாங்குளம் – வெள்ளாங்குளம் வீதியின் காட்டுப் பகுதியில் கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மாங்குளத்திலிருந்து நேற்று புதன்கிழமை மாலை மல்லாவி நோக்கிப் பயணித்த கப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இதன்போது பாலிநகர் வவுனிக்குளத்தைச் சேர்ந்த ஜீவகுமார் ஜெனிஸ்குமார் (வயது-18), குணாளன் டிசாந்தன் (வயது-18) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த ஒருவரின் சடலம் மல்லாவி வைத்தியசாலையிலும் மற்றையவரின் சடலம் மாங்குளம் வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன. இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மல்லாவி மற்றும் மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்