11 Oct 2018
அரசாங்கத்தின் தலைவர்களான ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து நாடாளுமன்றத்தை கலைக்கத் தீர்மானித்து தேர்தல் ஒன்றுக்கு சென்றே அரசாங்கத்தை மாற்ற முடியுமே அல்லாமல், இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி உள்ள அரசாங்கத்தை மாற்ற மக்கள் ஆணை வழங்கப்பட வில்லையென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
முன்னைய அரசாங்கமும் அவ்வாறு தான் மாற்றப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலை நடாத்தி மக்கள் ஆணையைக் கோரினர். இதன் பின்னரே அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதுவே ஒழுங்காகும். மக்கள் ஆணை இடைக்கால அரசாங்கத்துக்கு இல்லையெனவும் அவர் மேலும் கூறினார்.