இலங்கை செய்திகள்

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் பிணை இரத்து

09 Oct 2019

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இரத்து செய்துள்ளது.

பிணை உத்தரவு ரத்து செய்யப்பட்டமையினால் இவர்களை கைது செய்து, விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். சட்டமா அதிபர் தாக்கல் செய்த மீளாய்வு மனு தொடர்பான விசாரணையின் பின்னர் அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்