இலங்கை செய்திகள்

புளியங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி, 6 பேர் காயம்

11 Jul 2018

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 6 பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பேருந்து ஒன்று லொறி ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தும் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த லொறி ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

வவுனியா, புளியங்குளம் 198 ஆவது கட்டை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் பேருந்தில் குறிப்பிட்ட சிலரே இருந்ததாகவும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

காயமடைந்தவர்கள் வவுனியா மற்றும் புளிங்குளம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்