கனடா செய்திகள்

பார்த்திபனை தேடும் பணி தொடர்கிறது

13 Jun 2018

DJ Brown Soul என்றறியப்படும் பார்த்திபன் சுப்பிரமணியம் (27), கடந்த ஞாயிறு (ஜுன்10) இரவு 9:30 அளவில் ஒன்ராறியோ ஏரியில் நண்பர்களோடு படகில் சென்றுகொண்டிருந்தபோது, Scarborough Bluffers Park அருகே படகிலிருந்து வீழ்ந்து காணாமல் போயிருந்தார், இவரை தேடும் பணி இன்று செவ்வாய் (ஜுன்12) மாலை வரை தொடர்ந்தது இருப்பினும் இவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இன்று இரவு பொழுதாகிவிட்டபடியால் தமது தேடுதலை நிறுத்திய பொலிசாரும், கரையோர ரோந்து பிரிவினரும் மீண்டும் நாளை தமது தேடுதல் பணியை தொடரவுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்