உலகம் செய்திகள்

பாகிஸ்தானில் மழை மற்றும் வெள்ளம்

15 Apr 2019

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் சித்ரால் மாவட்டத்தில் டேனின் கிராமத்தில் பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.  இதனால் மலை பகுதியில் இருந்து பெரிய அளவிலான கற்கள் மற்றும் கழிவுகள் உருண்டோடி வந்து வீடு ஒன்றின் மீது விழுந்தன.  இதில் அந்த வீட்டில் இருந்த பெண் உள்பட 3 பேரும் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், பன்னர் மாவட்டத்தில் மலை பகுதியில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று திரும்பும்பொழுது திடீரென மலையிடுக்குக்குள் விழுந்து விபத்திற்குள்ளானது.  இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

வடக்கு பாகிஸ்தானில் உள்ள மலை பிரதேசங்களில் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.  இங்கு பல நகரங்களில் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் பனிப்பொழிவால் நிலச்சரிவுகளும் மற்றும் வெள்ள பெருக்கும் ஏற்பட்டு உள்ளது.  இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்