இந்தியா செய்திகள்

பல கோடி மதிப்பான மரகத லிங்கம் மீட்பு

15 May 2019

வேட்டவலத்தில் மலை மீது அமைந்துள்ள பழம்பெரும் அம்மன் கோவிலில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு காணாமல் போன பலகோடி மதிப்பிலான பச்சை நிற மரகத லிங்கம் குப்பை மேட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை வேட்டவலம் ஜமீன் குடும்பத்தினரால் ஜமீன் வளாகத்தில், மலையின் மீது அமைந்துள்ள பழம்பெரும் மனோன்மணி அம்மன் ஆலயத்தில் இருந்த பலகோடி மதிப்புள்ள பச்சை மரகத லிங்கம் மற்றும் நகைகள் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடா்பாக காவல் துறையினா் புகாா் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு கடந்த ஆண்டு காவல்துறையிடம் இருந்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்