இலங்கை செய்திகள்

நெடுங்கேணி பகுதிக்குட்பட்ட காட்டுப் பகுதியில் கஞ்சா தோட்டம் சுற்றிவளைப்பு

13 Feb 2020

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதிக்குட்பட்ட காட்டுப் பகுதியில் கஞ்சாசெடிகள் பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்று விசேட அதிரடி படையினரால் நேற்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது அரை ஏக்கர் அளவிலான குறுகிய நாட்களுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் போகஸ்வெவ பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்