உலகம் செய்திகள்

நியூயோர்க் குண்டுவெடிப்பிற்கு வங்க தேசத்தவர் குற்றவாளி

08 Nov 2018

கடந்த டிசம்பர் 11 ம் திகதி நியூயார்க் நகரின் மிகப் பரபரப்பான சுரங்கப்பாதை நிலையத்தில் ஒரு குழாய் வெடிகுண்டு வைப்பதவருக்கு பயங்கரவாத குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன.


பங்களாதேஷ் நாட்டை  சேர்ந்த 24 வயதுடைய அகய்ட் உல்லா என்பவரே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவர் தனக்கு டிரம்ப் மேல் உள்ள கோபத்தினாலேயே இதனை செய்ததாகவும் பின்னர் தானே தற்கொலை செய்துகொள்ள இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இவருக்கான தண்டனை அடுத்த வருடம் ஏப்பிரல் மாதம் 5ம் திகதி ஆரம்பமாகும்
தண்டனை 30 வருட சிறைத்தண்டனையாகவோ இல்லது ஆயுள் தண்டனையாகவோ இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் குண்டு வெடிப்பில் யாரும் இறக்கவில்லை, ஒரு சிலர் காயமடைந்திருந்தனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்