கனடா செய்திகள்

நான்கு வருடங்களுக்கான வரி அதிகரிப்பு தொடர்பில் எட்மன்டன் நகர மேயர் கலந்துரையாடல்

08 Nov 2018

அடுத்த நான்கு வருடங்களுக்கு எப்படி வரி உயர்வை அதிகரிப்பது என்பது தொடர்பில் எட்மன்டன் நகர மேயர் நேற்று வியாழக்கிழமை காலை சிறப்பு கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தார்.

மேலும் இதன் போது அடுத்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொன்றிலும் சொத்து வரிகளை அதிகரிப்பது பற்றி நகரம் ஊழியர்கள் 700 பக்கங்கள் கொண்ட முன்மொழிவொன்றினை முன்வைத்துள்ளனர்.

முன்மொழியப்பட்ட அதிகரிப்பின் படி சராசரி வீட்டு உரிமையாளருக்கு, அடுத்த வருடத்தில் கூடுதல் 79 டொலர் ஆக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2020 இல் 72 டொலர் மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொன்றிலும் சுமார் 50 டொலர்கள் அதிகரிக்கப்படும் எனவும் அந்த முன்மொழிவினூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 4 மாதத்திற்கான வரவு செலவுத் திட்ட பேச்சு மாதத்தின் இறுதியில் அரமபமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்