உலகம் செய்திகள்

நாங்களும் குறுகிய தூர ஏவுகணையை மேம்படுத்துவோம் - ரஷ்யா

05 Dec 2018

அமெரிக்கா குறைந்த தூர ஏவுகணை தயாரிப்பை மேம்படுத்தத் தொடங்கினால், ரஷ்யாவும் அவ்வாறே செய்யும் என ரஷ்ய அதிபர் புதின் அதிரடியாக அறிவித்துள்ளார்.

 

அமெரிக்கா சோவியத் யூனியன் இடையே 1987-ஆம் ஆண்டு குறுகிய தூர அணு ஆயுதப் படை ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 500 முதல் 5 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய அணு ஆயுதம் தாங்கிய அல்லது சாதாரண ஏவுகணைக்கு அந்த ஒப்பந்தத்தின் படி தடை விதிக்கப்பட்டது.

 

ஆனால், அமெரிக்கா-ரஷ்யாவிடையே பனிப்போர் நிலவும் சூழலில் அதைக் கைவிடுவதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இருநாட்டு உறவிலும் சுமூக நிலை ஏற்படுத்தும் பொருட்டு பெல்ஜியத்தில் நேட்டோ தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ, 60 நாட்கள் அவகாசத்தை ரஷ்யாவுக்கு வழங்கினார்.

 

இந்நிலையில், அமெரிக்கா குறுகிய தூர ஏவுகணையை மேம்படுத்தத் தொடங்கினால், ரஷ்யாவும் அவ்வாறே செய்யும் என அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் இரு நாட்டு உறவில் பதற்றம் நிலவுகிறது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்