இலங்கை செய்திகள்

தீர்வுக்கு வரும் எரிபொருள் தட்டுப்பாடு

23 Sep 2022

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலுக்கான கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த 41​,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கே கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெட்ரோல் கப்பலிலிருந்து பெட்ரோலை தரையிறக்கும் பணிகள் நேற்று(22.09.2022) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நிலக்கரி நிறுவனத்தின் அறிவிப்பு
இதேவேளை,லங்கா நிலக்கரி நிறுவனம் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி அடங்கிய 5 கப்பல்கள் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கமைய முதலாவது கப்பல் அடுத்த மாதம் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam