இலங்கை செய்திகள்

தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பே துணை - செல்வம் அடைக்கலநாதன்

14 Feb 2020

தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவளித்தால் தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களும் சோதனைச்சாவடிகளுமே அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே துணை என்றார்.

“இராணுவ பிரசன்னம் அதிகரித்த மாகாணமாக, வட மாகாணம் இன்று காட்சியளிக்கின்றது. இந்த அரசாங்கம் ஆட்சிப்பீடமேறிய கையோடு அதிகளவான இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தமிழ் மக்களை  நாள்தோறும் இம்சிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்