இந்தியா செய்திகள்

தமிழக அரசுக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம்

11 Jun 2019

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் படிப்பதற்காக வழங்கப்படும் நிதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு திடீரென பெருமளவு குறைத்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. உடனடியாக இம்முடிவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் இந்த முடிவினை தமிழக அரசு உடனடியாக கைவிட்டு, இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். வசதியற்ற மாணவர்கள் கட்டணம் எதையும் செலுத்தாமல் தனியார் பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்ய வேண்டும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்