கனடா செய்திகள்

ட்ரம்பை அதிபர் என்று அழைப்பதற்கே விரும்பவில்லை என்கின்றார் ஆஸ்கர் விருது வென்ற கலைஞர்

13 Jun 2018

கனேடிய பிரதமருக்கு எதிராக, அவரை  அவமதிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்துகளுக்காக தாம் மன்னிப்பு கோருவதாக அமெரிக்காவின் பிரபல நடிகர் றொபேர்ட் டீ நீரோ தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோவில் இடம்பெற்ற மாபெரும் நிகழ்வு ஒன்றுக்காக வருகை தந்திருந்த ஆஸ்கர் விருது வென்றவருமான றொபேர்ட் டீ நீரோ, அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்கள் மத்தியில் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர்  பலவீனமானவர் எனவும், நேர்மையற்றவர் என்றும் டொனால்ட் டரம்ப் கூறியுள்ளமை பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள நிலையில், தமது நாட்டு சனாதிபதியின் இந்த முட்டாள்தனமான குணாம்சம் குறித்து தான் மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரை அதிபர் என்று அழைப்பதற்கே தான் விரும்பவில்லை எனவும் றொபேர்ட் டீ நீரோ மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்