கனடா செய்திகள்

டக் ஃபோர்ட் ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்

11 Feb 2018

முன்னாள் ரொறன்ரோ நகரசபை உறுப்பினர் டக் ஃபோர்ட் தாம் ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சித் தலைமைத்துவப் பதவியை பெற்றுக்கொள்ளாவிட்டாலும், ஒன்ராறியோ மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சிக்கான தலைமைப் பதவிக்கான போட்டியில் குதித்துள்ள டக் ஃபோர்ட், அது தொடர்பில் நேற்றைய தினம் கருத்து தெரிவித்த போது இவ்வாறு கூறியள்ளார்.

எதிர்வரும் யூன் மாதம் ஒன்ராறியோ மாகாண சட்டமன்றுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் ஏதோவொரு வகையில், பழமைவாதக் கட்சியின்கீழ் தான் போட்டியிடவுள்ளமை உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரொரன்ரோ நரசபை தேர்தலில் கிடைத்த வெற்றியினை, மாநில அளவிலான வெற்றியாக தன்னால் மாற்றியமைக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்