இலங்கை செய்திகள்

ஜூலை 6 ஆம் திகதி வரை சமையல் எரிவாயு கிடைக்காது

24 Jun 2022

அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை சமையல் எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு கப்பல்களில் 7, 000 மெட்ரிக் தொன்  எரிவாயு நாட்டை வந்தடையவுள்ளது.

அந்த கப்பல்களில் உள்ள எரிவாயு கிடைக்கும் வரை கையிருப்பில் குறைந்தளவேனும் எரிவாயு இல்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam