சினிமா செய்திகள்

ஜி.வி.க்கு போட்டியாக களமிறங்கும் அதர்வா

16 May 2018

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘செம’ படம் வெளியாகும் அதே தினத்தில் அதர்வாவின் ‘செம போத ஆகாதே’ திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் நடிகர்களுள் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகியும் வருகிறார்.

அவரது நடிப்பில் கடைசியாக வெளியான நாச்சியார் படம் ஜி.வி.பிரகாஷூக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இந்த நிலையில், அவரது நடிப்பில் அடுத்ததாக `செம' படம் வருகிற மே 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செம போத ஆகாதே’ படமும் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

அதர்வாவின் ‘செம போத ஆகாதே’ திரைப்படம் மே 18ம் தேதி வெளியாகிறதாக இருந்தது. அன்றைய தினத்தில் அரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, விஜய் ஆண்டனியின் ‘காளி’ ஆகிய படங்கள் வெளியாக இருப்பதால், தன் படத்தை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார் அதர்வா.

பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் செம போத ஆகாதே படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்