இலங்கை செய்திகள்

செந்தில் தொண்டமானால் பிரேரிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டது

16 May 2019

ஊவா மாகாணத்தில் ஈரான் அல்-முஸ்தபா  சர்வதேச பல்கலைகழகத்தின் செயற்பாடுகளுக்கு தடை செய்து ஊவாமாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமானால் பிரேரிக்கப்பட்ட பிரேரணை நான்கு கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

ஈரான் அல்-முஸ்தபா  சர்வதேச பல்கலைகழகம் எனும் பெயரில் ஊவா மாகாணத்தின் 4 பாடசாலைகளை கேந்திரமாக கொண்டு நடைமுறைப்படுத்தபடும் பல்கலைக்கழகத்தின் மூலம் வெளிவாரி பட்டப்படிப்பினை ஊவா மாகாணத்தில்  நடைமுறைப்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும் எனவும்,  இரத்துச்செய்ய வேண்டும் எனவும்  ஊவாமாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமானினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணை ஊவாமாகாண சபையின் அனைத்து கட்சி உறுப்பினர்களினாலும்  ஏகமனதாக  நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஊவாமாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் கொண்டு வந்த பிரேரணைக்கு ஊவா மாகாண சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியன முழுமையான ஆதரவினை வழங்கின

சச்சிதானந்தன், தீபன் வேலாயுதம், சிவலிங்கம் மற்றும் கணேசமூர்த்தி ஆகிய தமிழ் மாகாண சபை உறுப்பினர்கள் ஈரான் அல்-முஸ்தபா  சர்வதேச பல்கலைகழகத்தின் செயற்பாடுகளை வன்மையாக கண்டித்ததுடன் செந்தில் தொண்டமான் கொண்டுவந்த பிரேரணைக்கும் ஆதரவு வழங்கியுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்