கனடா செய்திகள்

சுரேஸ் ஜோக்கிம் மரதன் ஓட்டத்தின் போது 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட எதிர்பார்ப்பு

09 Aug 2018

உலக சமாதான மனிதனாக கூறப்படும் கனேடிய தமிழரான சுரேஸ் ஜோக்கிம் தமது சமாதான ஓட்டத்தின் மூலம் அதிகளவான நிதியை திரட்டும் சாதனையை எதிர்பார்த்துள்ளார்.

பல உலக சாதனைகளை புரிந்துள்ள சுரேஸ் ஜோக்கிம் கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று தமது சாதனை மரதன் ஓட்டத்தை பெத்லஹேம் நகரில் ஆரம்பித்தார்.

இந்நிலையில் அவர் எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் திகதியன்று தமது சாதனை ஓட்டத்தை கனேடிய ரொறன்ரோ நகரில் நிறைவு செய்யவுள்ளார்.

இந்த சாதனை ஓட்டத்தின் போது சுரேஸ், உலக சமாதானத்தையும் வறுமையை ஒழிக்கும் அவசியத்தையும் மக்கள் மத்தியில் உணர்த்தி வருகிறார்.

அவர் தமது சாதனை பயணத்தில் 6 கண்டங்களில் உள்ள 72 நாடுகளின் 93 நகரங்களுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அவர் 220 நாட்கள் ஓடி முடித்துள்ளார். இதன்போது 2900 கிலோமீற்றர்களை அவர் கடந்துள்ளார்.

இந்தநிலையில் தமது சமாதான மரதன் ஓட்டத்தின் போது 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட சுரேஸ் ஜோக்கிம் எதிர்பார்த்துள்ளார். இதுவரை 10 ஆயிரத்து 200 டொலர்களை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்