இலங்கை செய்திகள்

சுதந்திரக் கட்சி கோட்டாபயவிற்கே ஆதரவு

08 Oct 2019

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கே ஆதரவு என சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் தனிப்பட்ட ரீதியில் தெரிவித்துள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் தனது சமுக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவிருந்தது, ஆனால், அது நேற்று திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டபோதும் இதுவரை உத்தியோகப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்