உலகம் செய்திகள்

சீனாவில் விளம்பர திரையில் ஆபாச படங்கள்

10 Jan 2019

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் லியாங் நகரில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர திரை ஒன்றில் இரவு நேரத்தில் ஆபாச படங்கள் ஓடி கொண்டு இருந்துள்ளன.  இதனை அந்த வழியே சென்ற மக்களில் சிலர் அவற்றை புகைப்படங்களாகவும் சிலர் வீடியோவாகவும் படம் பிடித்து உள்ளனர்.

இவை சீன சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.  இந்த பட காட்சிகளை அவரது கணினியில் பார்த்து கொண்டிருந்த பணியாளர் அவை திரையில் வராத வகையில் ஆஃப் செய்யவில்லை.  இதனால் 90 நிமிடங்களுக்கு ஆபாச பட காட்சிகள் திரையில் ஓடி கொண்டு இருந்துள்ளன.  இதனை அறிந்த சக பணியாளர் ஒருவர் பணியில் இருந்த நபரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உள்ளார்.  அதன்பின்பே இவற்றை கவனித்து கணினியில் ஆஃப் செய்துள்ளார்.

இதேபோன்று கடந்த வருடம் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள திரை ஒன்றில் ஆபாச பட காட்சிகள் ஓடிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்