கனடா செய்திகள்

சவுத் ஷோர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு

10 Feb 2019

மொன்ட்ரியல் – சவுத் ஷோர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

லோங்குவிலைச் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து அக்கட்டடத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கப்பட்டனர்.

பலர் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ள பல்கனியில் இருந்து கீழே குதித்ததில் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. மீட்கப்பட்ட மூன்று பேர் சுயநினைவின்றி கிடந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

மேலும் இந்த சம்பவத்தினால் காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 80 தீயணைப்பு வீரர்களின் போராட்டத்தின் பின்னர் மதியம் தீ கட்டுப்படுத்தப்பட்டது.

தீப்பிடித்ததற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்