இலங்கை செய்திகள்

சசி வீரவன்ச பயணித்த வாகனம் விபத்து

16 May 2018

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி, சசி வீரவன்ச பயணித்த ஜீப் வண்டி நேற்று மாலை 6 மணியளவில், நாத்தாண்டிய – தங்கொட்டுவ வீதியில், மாவத்தகம பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக, கொஸ்வத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முன்னேஸ்வரம் ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில், ஈடுபட்டு திரும்பும் போதே, மற்றுமொரு வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையென்ற போதிலும், வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்