இலங்கை செய்திகள்

குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு அஞ்சலி

16 May 2018

நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு  நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து  64 பயணிகளுடன் பயணித்த குமுதினி படகு  கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த 33 ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்றாகும்.

இதனை நினைவு கூரும் முகமாக நெடுந்தீவு துறைமுக பகுதியில் அமைந்துள்ள நினைவுத் தூபி முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் விந்தன் கனகரட்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV