கனடா செய்திகள்

கல்கரியில் தீப்பற்றிய காரிலிருந்து 3 சடலங்கள் மீட்பு

11 Jul 2017

கல்கரி பகுதியில் கார் தீப்பற்றி எரிந்த நிலையில் மூவரின் சடலங்கள் தீயணைப்பு வீரர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கல்கரி வடமேற்கு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆண் ஒருவரின் சடலமும் பெண்கள் இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கல்கரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த மூவரும் அடையாளம் காணப்படவில்லை.

கற்பனை செய்ய முடியாத அளவில் கார் தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஒரு விபத்தா அல்லது குற்ற நடவடிக்கையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்