உலகம் செய்திகள்

கலிபோர்னியா இரவு விடுதியில் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி

08 Nov 2018

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மதுபான விடுதி ஒன்றில்  கூடியிருந்தவர்கள் மீது துப்பாக்கிதாரி கண்மூடித் தனமாக சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.

கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள தவுசண்ட் ஓக்ஸ் ((Thousand Oaks)) நகரில் உள்ள பிரபல மதுபான விடுதி ஒன்றில் கல்லூரி மாணவர்களின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு சுமார் 200 பேர் கூடியிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த நபர் கைத்துப்பக்கியால் கண்மூடித் தனமாக சுட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அந்த நபர் கண்ணீர்புகைக் குண்டை வீசியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதில்  படுகாயம் அடைந்த பலர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஒரு காவல் அதிகாரி உட்பட 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறியுள்ளனர். துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகிக்கப்படும் நபரும் மதுபான விடுதிக்குள்ளேயே இறந்து கிடந்ததாகவும், அவன் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர் 28 வயதான இயன் டேவிங் லாங் என்று அடையாளம் காணப்பட்டார்.

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV