கனடா செய்திகள்

கலிடோனியா-Fairbank குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்- ஒருவர் படுகாயம்

10 Oct 2018

ரொறன்ரோவுக்கு அருகில் கலிடோனியா-Fairbank குடியிருப்பு பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Eglinton Avenue மற்றும் Dufferin Street பகுதியில், Ennerdale வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு்ளளார்.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்ற போது, அங்கே ஆண் ஒருவர் பாரதூரமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும், உடனடியாகவே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில், குறித்த அந்தப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்ற இரண்டு நபர்கள், அஙகிருந்த ஆண் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் குறித்த அந்த 32 வயது நபரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இடுப்பு பகுதியிலும் காலிலும் பலத்த காயங்களுக்கு இலக்கான அவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்பப்படுவதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அந்த வீட்டில் பிறிதொரு பெண்ணும் இருந்துள்ள போதிலும், அவருக்கு காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் குறித்த மேலதிக விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்