விளையாட்டு செய்திகள்

கலப்பு இரட்டையரில் சானியா விலகல்

23 Jan 2020

இந்திய வீராங்கனை 33 வயதான சானியா மிர்சா, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து ஆட திட்டமிட்டு இருந்தார். ஆனால் வலது பின்னங்காலில் பிரச்சினை இருப்பதால் கடைசி நேரத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து சானியா விலகிவிட்டார். அதே சமயம் பெண்கள் இரட்டையர் பிரிவில் அவர் உக்ரைனின் நாடியா கிச்செனோக்குடன் கைகோர்த்து களம் இறங்குகிறார். சானியா-கிச்செனோக் ஜோடி தங்களது முதலாவது சுற்றில் இன்று சீனாவின் ஸின்யுன் ஹான்- லின் ஜூ ஜோடியை சந்திக்கிறது.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்