கனடா செய்திகள்

கனேடியர்கள் பனி நடனத்தில் தங்கப்பதக்கம் வென்றனர்

17 Feb 2017

கனடியர்களான Tessa Virtue மற்றும் Scott Moir இருவரும் தென் கொரியா, PYEONGCHANGல் நடந்த ISU Four Continents Figure Skating போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர்.

லண்டன் ஒன்ராறியோவை சேர்ந்த Virtue, மற்றும் இல்டரோன் ஒன்ராறியோவை சேர்ந்த Moir, இருவரும் 196.95புள்ளிகளை பெற்று முதலிடத்தை வென்றுள்ளனர்.

அமெரிக்கர்களான மெயா மற்றும் அலெக்ஸ் சிபுரானி 191.85புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். ரொறொன்ரோவை சேர்ந்த கெயிட்லின் மற்றும் வாட்டர்லூ, ஒன்ராறியோவை சேர்ந்த அன்ட்ரூ போஜே இருவரும் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளனர்.

இப்போட்டிகள் அடுத்த மாதம் ஹெல்சிங்கியில் இடம்பெறவுள்ள உலக சம்பியன்சிப் போட்டி மற்றும் 2018 Pyeongchang ஒலிம்பிக் போட்டி ஆகியனவற்றிற்கு ஒரு சரிப்படுத்தல் சரிப்படுத்தல் நிகழ்வாகும் எனவும் கூறப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்