கனடா செய்திகள்

கத்திக் குத்துக் காயங்களுடன் வந்தடைந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

12 Jun 2019

ரொறன்ரோ டவுன்ரவுனில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இன்று காலையில் கத்திக் குத்துக் காயங்களுடன் வந்தடைந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்திக் குத்து தாக்குதலுக்கு உள்ளான நிலையில், வாடகை வாகனம் ஒன்றின் உதவியுடன் குறித்த அந்த நபர் Richmond Street மற்றும் University Avenueவில் உள்ள விடுதியை வந்தடைந்ததாக காவல்துறையினர் விபரம் வெளியிட்டுள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான குறித்த அந்த நபர் ஆபத்தான நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முன்னர் அவசர மருத்துவப் பிரிவினரால் கூறப்பட்ட போதிலும், பின்னர் தகவல் வெளியிட்ட காவல்துறையினர், அவர் பிழைத்துவிடுவார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், நேற்று இரவு Yonge street மற்றும் Gerrard street பகுதியில் மோதல் இடம்பெற்றதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், அந்த மோதலின் போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்தும் ஆராய்வதாகவும் தெரிவித்துள்ள காவல்துறையினர், அது குறித்த தெளிவான விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்