கனடா செய்திகள்

ஓடு பாதையில் திடீரென தீப்பற்றிய சிறிய ரக விமானம்

03 Aug 2022

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் சென் ஜோன்ஸில் அமைந்துள்ள பிராந்தயி விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று ஓடு பாதையில் வைத்து திடீரென தீப்பற்றி விபத்திற்குள்ளானது.

இந்த சிறிய ரக விமானம் கண்காட்சி ஒன்றில் பங்கேற்றதன் பின்னர்  திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும், விமானம் விபத்துக்குள்ளான போதிலும் விமானிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தின் ஓடுபாதையில் வைத்து விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது. என்ன காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றது என்பது இன்னமும் தெளிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

 

.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam