இலங்கை செய்திகள்

ஒற்றையாட்சி முறைமை சவாலுக்குட்படுத்தப்படாது -அமைச்சர் ரவி

12 Jul 2017

பௌத்த மதத்தைப் பாதுகாத்து அதற்குரிய கௌரவத்தை வழங்கி ஒற்றையாட்சி முறைமையின் கீழேயே அரசமைப்பு உருவாக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நாட்டை மீட்டெடுத்த படையினரைப் பாதுகாப்பதற்காக அரசு என்ற வகையில் நாம் உறுதி கொண்டுள்ளோம். இனவாதத்தைத் தூண்டிவிட்டு நாடு என்ற வகையில் எம்மால் முன்னேறிச் செல்ல முடியாது.

நாம் எல்லோரும் ஒரே தேசத்தினராக முன்னேறிச் செல்ல வலுவான ஆட்சி முறைமை அவசியம் என்ற தீர்மானத்துக்கு வரவேண்டும்.

பௌத்த மதத்துக்குரிய கௌரவம் பெற்றுக்கொடுக்கப்படும். ஒற்றையாட்சி முறைமை சவாலுக்குட்படுத்தப்படாது. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலேயே அரசமைப்பு உருவாகும் என்றார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV