இலங்கை செய்திகள்

எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் - பிரசன்ன ரணதுங்க

11 Feb 2018

வெளியாகியுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன், மக்களின் அபிப்ராயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் என்றும், பிரதமரை பதவி நீக்கிவிட்டு புதிய அரசாங்கத்தை அமைப்பதுக்கான தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளை வெளியிடும் பத்தலகெதர வித்தியாலய மத்திய நிலைய வளாகத்தில் வைத்து இன்று  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்