இலங்கை செய்திகள்

ஈரான் தூதுவரின் இல்லத்தில் தீ விபத்து

12 Feb 2018

கொழும்பில் அமைந்துள்ள ஈரான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்றைய தினம் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தை அடுத்து, கொழும்பு மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் வெளிவரவில்லை.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்