உலகம் செய்திகள்

ஈராக்கில் இருக்கும் இராணுவத்தை நியூசிலாந்து அடுத்த ஆண்டு திருப்பியழைக்கும்

11 Jun 2019

ஈராக்கில் உள்ள இராணுவ படைகளை அடுத்த அண்டுக்குள் மீட்டுக்கொள்ளவிருப்பதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சமாளிக்க நியூசிலாந்து ராணுவ படையினர் ஈராக் தற்காப்பு அதிகாரிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக பயிற்சி அளித்தனர்.

பயிற்சிமூலம் கிட்டத்தட்ட 44,000 ஈராக்கிய வீரர்கள் பயனடைந்துள்ளதாக நியூசிலாந்து கூறியது.

தற்போது ஈராக்கில் பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் குறைந்துவருவதால் நியூசிலாந்து அதன் படையினரைத் மீட்டுக்கொள்ளவிருப்பதாகக் கூறியது..

சுமார் 95 நியூசிலாந்து வீரர்கள் ஈராக்கில் இருக்கின்றனர். அவர்கள் கட்டம்கட்டமாக அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் தாயகம் திரும்புவார்கள் என்று அந்நாட்டு பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern) தெரிவித்தார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்