கனடா செய்திகள்

ஈட்டோபிக்கோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவர் படுகாயம்

20 Oct 2019

இன்று காலை வேளையில் ஈட்டோபிக்கோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பல்வேறு தடவைகள் சுடப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளான ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலை 409இற்கு வடக்கே, Atwell Drive மற்றும் Belfield வீதிப் பகுதியில் இன்று அதிகாலை 3:22 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதனை ரொறன்ரோ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, அங்கு ஆண் ஒருவர் பலத்த துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும், ஆபத்தான நிலையில் அவர் சணிபுரூக் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படாத நிலையில், விசாரணைகள் தொடர்கின்றன.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்