விளையாட்டு செய்திகள்

இந்திய அணி இன்று தேர்வு

13 Aug 2017

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்திய அணி அடுத்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 20–ந்தேதி தம்புல்லாவில் நடக்கிறது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் நடந்த முத்தரப்பு தொடரில் இந்திய ‘ஏ’ அணிக்காக பங்கேற்று மொத்தம் 307 ரன்கள் ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே அணிக்கு திரும்புகிறார்.

மூத்த வீரர் யுவராஜ்சிங்குக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னாவின் பெயர்கள் பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV