உலகம் செய்திகள்

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபை கவலை

12 Jul 2019

வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்கா-இந்தியா கூட்டுறவு பொதுமன்ற நிகழ்வின் கலந்துரையாடலில் பங்கேற்ற நான்சி பெலோசி பேசியதாவது:-

முன்னர் அதிபராக இருந்த ஒபாமாவுடன் இந்தியா சென்றபோது, தொழில்துறையினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியதைக் கேட்டேன்.  நான் கேட்டவற்றிலேயே அற்புதமான பேச்சு அது.

ஆங்கிலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கேட்பவர்களை தனது பேச்சால் கட்டிப்போடும் வகையில் பேசியதாகவும், தான் சொல்ல வந்த செய்தியை கொண்டு சேர்ப்பதிலும் அவர் வல்லவர் ஆவார்.  சிறுவயதில் தாம் ஒரு  முறை தொப்பி அணிந்திருந்த விதத்தை பார்த்து நீ என்ன மகாத்மா காந்தியா என பள்ளியில் ஆசிரியை கேட்டதாகவும், அதன் பிறகு மகாத்மா காந்தி குறித்து தாம் தேடித்தேடி படித்தேன் என்றும் மோடி கூறினார்.

இந்திய-அமெரிக்க உறவுகள் ஒட்டுமொத்த உலகத்தையே கைதூக்கிவிட முடியும். அதற்காக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நான்சி பெலோசி கூறினார்.

இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து பெலோசி கவலை தெரிவித்தார்.
 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்