இலங்கை செய்திகள்

அரசியல் தீர்வு அத்தியாவசியமானது - ரணில்

04 Aug 2022

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டியது அத்தியாவசிய விடயமாகும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கொள்கைப் பிரகடன உரையின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். போரால் பாதிக்கப்பட்ட அவர்கள் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்போது மேலும் பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தீர்க்க வேண்டிய காணிப் பிரச்சினைகள் பல உள்ளன. வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக நாம் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam