இலங்கை செய்திகள்

“ரணில், கோட்டா இருவரையும் தோற்கடிக்க வேண்டும்”

14 May 2022

ரணில் பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தவர் என பிரசாரம் செய்து ஆட்சியமைத்த ராஜபக்‌ஷவினர் இன்று ரணிலையே பிரதமராக்கி ஆட்சி செய்வது மிக கீழ்த்தரமான அரசியல் கலாசாரமாகும், எனவே ரணில், கோட்டாபய இருவரையும் தோற்கடிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்‌ஷவின் குற்றங்களுக்கு எதிராக, கொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிராக ரணிலால் செயற்பட  முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் நேற்று(13)  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில், இப்போது அமையப்பெற்றுள்ள அரசாங்கமானது கோட்டாபய ராஜபக்‌ஷவினதும், ரணில் விக்ரமசிங்கவினதும் கபடத்தனமான செயற்பாட்டால் உருவாக்கப்பட்டதாகும். நாடாளுமன்றத்திற்கு தெரிவாவதற்கு கூட மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ள முடியாத அவரால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்றார்.

நீண்ட நாட்களுக்கு முன்னரே ரணில் விக்ரமசிங்கவை மக்கள் புறக்கணித்துவிட்டனர். அதேபோல் தனக்கு வாக்களித்த சகல தரப்பினாலும் நிராகரிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷ, ரணிலுடன் இணைந்து ஆட்சியை கொண்டு நடத்துவதானது எந்தவொரு ஜனநாயக அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam