இந்தியா செய்திகள்

‘வியாபம்’ ஊழல் வழக்கில் 490 பேர் மீது குற்றப்பத்திரிகை

01 Nov 2017

மத்திய பிரதேச மாநிலத்தின் தேர்வாணையமான ‘வியாபம்’ 2013–ம் ஆண்டு பல்வேறு அரசு பணிகளில் சேருவதற்கு நடத்திய தேர்வுகளில் பெரும் அளவில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய பலர் அவ்வப்போது மரணம் அடைந்ததால் இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்தது. இதைத் தொடர்ந்து இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த முறைகேட்டில் மாநில முதல்–மந்திரி சிவராஜ் சிங் பெயர் மறைமுகமாக இடம் பெற்று இருப்பதாகவும், முக்கிய குற்றவாளியிடம் கைப்பற்றிய கம்ப்யூட்டர் ‘ஹார்டு டிஸ்க்’கில் பதிவாகி இருந்த முதல்–மந்திரியின் பெயர் அழிக்கப்பட்டு விட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இதுகுறித்தும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில் ‘வியாபம்’ ஊழல் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தது. அதில் பல முக்கிய அதிகாரிகள் உள்பட 490 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அதேநேரம் குற்றவாளியிடம் கைப்பற்றிய ‘ஹார்டு டிஸ்க்’கில் முதல்–மந்திரி பற்றி எதுவும் கூறப்படவில்லை என்றும், குற்றவாளியிடம் கைப்பற்றப்பட்ட ஹார்டு டிஸ்க் சேதப்படுத்தப்படவில்லை எனவும் கூறப்பட்டு இருந்தது.

அடுத்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மாநிலத்தில் ஆளும் கட்சியான பா.ஜனதாவுக்கும், முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகானுக்கும் இது பெரும் நிம்மதியை தந்துள்ளது.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV