இந்தியா செய்திகள்

‘மஹா’ புயல் அபாயத்தில் இருந்து குஜராத் தப்பியது

08 Nov 2019

‘மஹா’ புயல்  நேற்றுமுன்தினம் மாலையில் இருந்து வலுவிழக்கத் தொடங்கியது. தீவிர காற்றழுத்த பகுதியாக வலுவிழந்து, நேற்று காற்றழுத்த பகுதியாக மாறியது. குஜராத் கடலோர பகுதியை தொடாமலே, அரபிக்கடலில் 100 கி.மீ. தொலைவில் நிலை கொண்டது. அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த பகுதியாக பலவீனமடையும் என்று தெரிகிறது.


இதனால், குஜராத் தப்பியது. இருப்பினும், குஜராத்தின் சில மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்