உலகம் செய்திகள்

ஹேல்மண்ட் மாகாணத்தில் உள்ள தென் மாவட்டத்தை மீட்டதாக ஆப்கான் அரசு தகவல்

17 Jul 2017

 

ஆப்கானிஸ்தானில்  ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டா படையினருடன் இணைந்து ஆப்கான் அரசு படைகள் போரிட்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தான் தென்பகுதியில் உள்ள ஹேல்மண்ட் மாகாணத்தின் தலைநகரான லஷ்கர் கா என்ற இடத்தில் இருந்து சுமார் 10 மைல் தொலைவில் நாவே என்ற மாவட்டம் உள்ளது. இந்த பகுதியை தலீபான்கள் தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். நாவே பகுதியில் இருந்துதான் மாகாண தலைநகர் லஷ்கர் கா நகரத்தில் பல தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நாவே மாவட்டத்தை மீட்க ஆப்கான் பாதுகாப்பு படை தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், லஷ்கர் கா பகுதியை தலீபான்களிடம் இருந்து மீட்டதாக ஆப்கான் பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 மேலும், அவர் கூறுகையில், நாவே மாவட்டத்தை மீண்டும் கைப்பற்ற நடைபெற்ற சண்டையின் போது 50 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் 5 பேர் காயம் அடைந்தனர். பெருமளவிலான வெடி மருந்துகள் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்றார். ஆனால், நாவே மாவட்டத்தை இழந்தது குறித்து தலீபான்கள் தற்போது வரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV