இலங்கை செய்திகள்

ஹெரோயின் வைத்திருந்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணத்தில் கைது

14 Sep 2018

ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவரை யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 9 கிராம் 850 மில்லி கிராம் நிறையுடைய  ஹெரோயினை வைத்திருந்த யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கோண்டாவில் பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்